Featured Blog
"யானையின் துதிக்கை போல் பனை மரத்தின் பனைக்கை", என்பார்கள்.
Ancient says, "Like the trunk of an elephant, the palm of a palm tree."
தேவாரம், திருமுறை ஒன்றில்,
"பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியா யெனப்பேணி
நினைக்க வல்ல வடியார் நெஞ்சி னல்லாரே"
பனைபோன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! என்று பனையை யானையின் தும்பிக்கையுடன் ஒப்பிடுகிறார்!
Meaning, "He who attracted the palm-armed elephant and wrapped it in its skin!".
பனையும் பெண்ணும் ஒன்று!:
கட்டி தழுவுதால் கால் சேர ஏறுவதால் எட்டி பன்னாடை இழுத்தலால் - முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும் வேசை எனல் ஆமே விரைந்து.
விளக்கவுரை:
'கட்டி தழுவுதால் கால் சேர ஏறுவதால்' - பனை மரத்திலே ஏறும் போது அதை கட்டிப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களும் மரத்திலிருந்து பிரியாமல் மரத்தோடு உராய்ந்தவண்ணம் தான் ஏற வேண்டும். ஒரு பெண்ணைத் தழுவும் போதும் அப்படியே.
'எட்டி பன்னாடை இழுத்தலால்' - பனையின் உச்சிக்கு ஏறியதும், அங்கே பாளைகளை மறைத்துக் கொண்டு தடையாக இருக்கும் பன்னாடைகளை இழுத்து களைந்து ஏறிய வேண்டும்.பெண்ணுக்கும் ஆடைகளை களைதல் வேண்டும்.
'முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால்' - பாளையின் அருகே நெருங்கிச் சென்று அங்கே சுரந்திருக்கும் கள்ளை அருந்த வேண்டும். பெண்ணையும் நெருங்கி அருகில் சென்று ஆசையோடு இதழ் பருக வேண்டும்.
எனவே இத்தகைய பொதுப் பண்புகளால் பனையும் பெண்ணும் ஒன்று.
அணில் குருவி மைனா வவ்வால் குளவி காகம் அனைத்து உயிரினங்களும் உண்ணும் ஒரே பானம் பதநீர் கல்லும் தான்
பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அறிய மரம் பனை. 30 வருடத்திர்கு முன் இந்தியாவில் தோராயமாக 9 கோடி பனை மரம் அதில் 6 கோடி தமிழ் நாட்டில் இருந்தனவாம். முன்னனியில் இருந்த நம் மாநிலம் தற்போது ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலத்திர்கு பின் சென்று விட்டோம். ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி மத்தூர், பட்டுகோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கலாம்.
The palm tree was considered as an auspicious tree in Palandamizhar life. The palm tree can be used for various purposes like ceremony (marriage - thali and earring), leaf printing, sweets, woodwork, folk medicine. 30 years ago there were approximately 9 crore palm trees in India out of which 6 crore were in Tamil Nadu. Our state which used to be in the front, now we have gone behind states like Andhra Pradesh, West Bengal and Odisha. Once upon a time you can see more in places like Krishnagiri Mathur, Pattukottai, Aranthangi, Sivagangai, Paramakkudi, Karaikudi, Ramanathapuram etc.
ஆனால் தற்பொழுகு அறிதாகி வருகிறது. இவை சிறந்த உயிர் வேலி ஏன் யானை கூட உள்ளே நுழைய முடியாது. ஆடு மாடு மேயாமல் ஒரளவு நீர் வசதியுள்ள நிலப்பரப்பில் 8 வருடங்களில் பலன் தரக்கூடியது. மேலும் வற்டசியை தாங்கி வளரக் கூடியது. மணலும் களிபாங்கு உள்ள கடற்கரைக்கு கூட ஏற்றது. தென்னை சாகுபடி பிற்கால மரபு பயிர் ஆனால் பனை சங்க காலம் முதல் தமிழ் நாட்டில் தோன்றிய மரம்.
But now it is becoming known. These are the best living fences because even elephants can't get inside. It can bear fruit in 8 years in a well watered land without grazing by goats and cattle. Also able to withstand wind stress. It is also suitable for beaches with sand and gravel. Coconut cultivation is a later traditional crop but the palm tree has appeared in Tamil Nadu since the Sangam period.
பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன என்று சொல்லப்படுகிறது. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
It is said that there are 2 types of palm, male and female. The female palm is commonly referred to as the season palm and the male palm as the beauty palm. The palm grows to a height of 15 feet after 10 years. The flower blooms only after these 10 years. Only then can you know which palm is male and which is female.
தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.
The state tree of Tamil Nadu is the palm. A genus of herbaceous plants. Growing in subtropical regions similar to the climate of Tamil Nadu, the palm can live for at least 60 years. Every part of the palm from the root to the tip gives us many useful uses.
மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.
As it has a very long and strong rhizome, our forefathers cultivated it along field banks, pond canals, river basins and coastal areas as a natural barrier against soil erosion. Planted in fields and gardens to mark the boundaries of the place.
கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது. பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெற்றது ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறும் பனை ஓலையால்தான். திருவள்ளுவர் என்றதும் நம் நினைவில் தோன்றுவது ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்திய திருவள்ளுவரைத்தான்.
The solid stem of the palm, like a black rock, is used as a palm tree in huts and huts and as a wooden bridge to cross small canals and ditches. Many Sangha literary texts have been made available from the palm leaf, which is characterized as Olaivadi. When we think of Thiruvalluvar, we remember Thiruvalluvar carrying a palm leaf pad and pen.
பனையை வைத்து பல பழமொழிகளும் நடைமுறையில் உள்ளன:
உயர்ந்த மரத்திலே
உச்சாணி கிளையிலே
மூணுக்கண்ணி பாப்பாத்தி
முக்காடு போட்டிருக்காக, அது என்ன?
கழுத்தை அறுத்தால் கண் தெரியும், அது என்ன?